தாய்மாமாவின் 100-வது பிறந்த நாள்: நேரில் சந்தித்தார் மு.க.ஸ்டாலின்
1 min read
Grandmother’s 100th birthday: Meet M.K.Stalin in person
14.11.2022
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது தாய்மாமாவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். திருவாரூர், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கொட்டுகிறது. இந்த மழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது தாய்மாமாவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, நலம் விசாரித்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கோவில் திருமாளம் பகுதியில் தாய்மாமா தெட்சிணாமூர்த்தியை நேரில் சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரிடம் ஆசி பெற்றார்.