கள்ளக்காதல் ஜோடியை கொலை செய்த சாமியார்
1 min read
he preacher who killed the counterfeiting couple
22.11.2022
ராஜஸ்தானில் கள்ளக்காதல் ஜோடியை கொலை செய்த சாமியார் கைது செய்யப்பட்டார்.
சாமியார்
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் கோகுண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேலா பவுடி காட்டில் வாலிபர் மற்றும் இளம் பெண் ஒருவர் நிர்வாண உடல்கள் மீட்கப்பட்டன. போலீசார் முதலில் இது கள்ளத்தொடரபு அல்லது கவுரவக் கொலையாக இருக்கும் என நினைத்தனர்.
அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார். அந்த பகுதியில் நடமாடிய பாலேஷ் குமார் என்ற சாமியாரை கைது செய்தனர்.
அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் இருவரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்காதல்
பாலேஷ் குமார் ஜோஷி கோகுண்டாவின் பத்வி குடாவில் உள்ள தந்திர வித்யாவில் பணிபுரிந்து வந்தார். அந்தபகுதியில் அவர் பிரபலம். மக்கள் தங்கள் கஷ்டங்களை நிவர்த்தி செய்ய அவரிடம் வழி கேட்டு வருவார்கள்.
சோனு குன்வர் என்ற இளம்பெண்ணின் திருமண வாழ்க்கை குழப்பமாக சென்று கொண்டிருந்தது. இதனால், தொடர்ந்து அவர் அங்கு வந்து செல்வது வழக்கம். இளைஞரான ராகுல் மீனாவும் சாமியாரிடம் வந்து சென்றார்.
இவ்வாறு அவர்கள் வரும் போது சோனு குன்வருக்கும் ராகுல் மீனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை ராகுல் மனைவி எதிர்த்து உள்ளார். சாமியாரிடம் இருவரையும் பிரிக்குமாறு கூறி உள்ளார்.
சாமியார் அதற்கு பூஜை மற்றும் செய்வதாக கூறி பணம் பறித்து உள்ளார். ஆனால் காதல் ஜோடியின் நெருக்கம் அதிகமானதே தவிர இருவரும் பிரியவில்லை. இதனால் சாமியார் தனது பெயர் கெட்டுவிடும் என நினைத்து கள்ளக்காதல் ஜோடியை பிரிந்து செல்லுமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் அவர்கள் பிரியவில்லை
கொலை
இதனால் அவர்கள் இருவரையும் தீர்த்து கட்ட திட்டம் தீட்டினார். ரூ 5.க்கு விற்கும் பெவிகுவிக் பசையை அதிகமாக வாங்கி அதனை ஒரு பாட்டலில் சேகரித்தார். பின்னர் ராகுலையும், சோனுவையும் அழைத்து, அவர்களை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த இடத்தில் இருவரும் தனிமையில் இருந்தால் நீங்கள் பிரியப்போவது இல்லை என கூறினார். இதனை நம்பிய அவர்கள் தனிமையில் உல்லாசத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீர் என சாமியார் மறைத்து வைத்து இருந்த பாட்டிலில் உள்ள பெவிகுவிக்க்கை இருவர் மீதும் கொட்டினார். இதில் அவர்கள் கண் மட்டும் வாயில் பெவிகுவிக் பட்டு பார்க்க சிரமப்பட்டனர் அப்போது சாமியார் கத்தி மற்றும் கற்களால் தாக்கி இருவரையும் கொலை செய்து உள்ளார்.
மேற்கண்ட தகவல் விசாரணையில் தெரியவந்தது.