தமிழகத்தில் 208 பேருக்கு பணி நியமன ஆணையை எல்.முருகன் வழங்கினார்
1 min read
L. Murugan gave the appointment orders to 208 people in Tamil Nadu
22.11.2022
தமிழகத்தில் 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய மந்திரி எல்.முருகன் வழங்கினார்.
வேலை வழங்கும் திட்டம்
மத்திய அரசில் ஒரு ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாடு முழுவதும் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
2-வது கட்டமாக இன்று நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமனங்களை பிரதமர் மோடி வழங்கினார். டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அதேநேரத்தில் இதர மாநிலங்களில் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டு வழங்கினர்.
சென்னை ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப். மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு மத்திய மந்திரி எல்.முருகன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் தபால்துறை, மருத்துவ துறை, வங்கி பி.எஸ்.எப். உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய மந்திரி எல்.முருகன் வழங்கினார்.