அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு – தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
1 min read
Fraud case against Minister Senthil Balaji – Supreme Court action order to Tamil Nadu Govt
23.11.2022
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவை பிற்பபித்துள்ளது.
செந்தில் பாலாஜி
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீதுள்ள வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பாலாஜி சார்பில் வக்கீல் பாலாஜி ஸ்ரீனிவாசன், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் கடந்த 10-ந்தேதி ஆஜரானார். அப்போது அவர் “இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, மேல்முறையீடு மனு நவம்பர் 18-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது. அதில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நவம்பர் 23-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது” என தெரிவித்தனர்
உத்தரவு
. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அதில் மேல்முறையீடு மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது மேலும் மோசடி விவகாரம் தொடர்புடைய வழக்கு ஆவணங்களை தற்போதுள்ள நிலையிலேயே பத்திரமாக வைக்க வேண்டும் என , இறுதி விசாரணை ஜனவரி 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது