திருமணத்திற்கு பெற்றோர் தடுத்ததால் காதலர்கள் தூக்குப்போட்டு தற்கொலை
1 min read
Lovers hanged themselves because their parents prevented them from marrying
23.11.2022
திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால் தாம்பரம் அருகே காதலர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
காதலர்கள்
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே பீர்க்கன்காரணை பகுதியில் வசித்து வந்தவர் ஜெயராமன். இவரும், யுவராணி என்ற பெண்ணும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.
இந்த நிலையில், யுவராணிக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்றைய தினம் ஜெயராமன் வீட்டில், யுவராணியும் ஜெயராமனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.