திருப்பதியில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் டிக்கெட் நாளை வெளியீடு
1 min read
Tirupati Senior Citizens and Disabled Darshan Tickets Released Tomorrow
23.11.2022
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் டிக்கெட் நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது.
திருப்பதி கோவில்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்யும் வகையில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. தரிசனத்திற்கு வர விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்களை பதிவு செய்துவிட்டு வரவேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முடிகாணிக்கை
திருப்பதியில் நேற்று 69,587 பேர் தரிசனம் செய்தனர். 28,645 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.35 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. கடும் குளிர் மற்றும் மழையால் திருப்பதியில் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் அவதியடைந்துள்ளனர்.