மங்களூரு குண்டுவெடிபபுக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் பொறுப்பேற்பு
1 min read
Islamic Resistance Council claims responsibility for Mangalore blasts
24.11.2022
மங்களூரு குண்டுவெடிப்பு: இலக்கை அடையவில்லை என்றாலும் இதை வெற்றியாக கருதுகிறோம் என இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் பொறுப்பேற்று உள்ளது.
குண்டு வெடிப்பு
மங்களூருவில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய ஷாரிக், ஒரு மதத்திற்கு பயங்கரவாத சாயம் பூச முயன்றது அம்பலமாகி உள்ளது. ஆட்டோவில் வெடித்த குண்டு மங்களூரு நாகுரி பகுதியில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து இருந்தது. இதில் அந்த ஆட்டோவில் பயணித்த ஷாரிக், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரிக், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், அவர் மங்களூருவில் பெரிய அளவில் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்து உள்ள இந்த நிலையில் மங்களூரு குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் (ஐஆர்சி) என்ற அமைப்பு பொறுப்பேற்பு உள்ளது என கர்நாடகா காவல்துறை தகவல் தெரிவித்து உள்ளது.
இலக்கை அடையவில்லை என்றாலும் இதை வெற்றியாக கருதுகிறோம் என குறிப்பிட்டு கடிதம் எழுதி உள்ளனர்.