தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த ஐகோர்ட்டு தடை
1 min read
High Court bans cell phone use in all temples in Tamil Nadu
2.12.2022
தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
செல்போன்
திருப்பதி கோவிலுக்குள் யாரும் செல்போன் கொண்டு போக முடியாது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் அவ்வாறே செல்போன்கள் கொண்டு போக அனுமதி இல்லை. செல்போன்களை டிக்கெட் வாங்கிக் கொண்டு லாக்கர்களில் வைத்துவிட வேண்டும். சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து விட்டு செல்போன்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
அதுபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் இனி செல்போன்கள் கொண்டு போக முடியாது. அங்கு செல்போன்களுக்கு தடைவிதிக்கும்படி மதுரை ஐக்கோர்ட்டு ஆணையிட்டு இருக்கிறது.
இந்தநிலையில், தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையைக்காக்கும் விதமாக செல்போன் தடையை நடைமுறைப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.