பாகிஸ்தானில் இருந்து டிரோனில் கடத்தப்பட்ட போதை பொருள் பறிமுதல்
1 min read
Seizure of drugs smuggled by drone from Pakistan
2.12.2022
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் டிரோனில் கடத்தி வரப்பட்ட போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
டிரோன்
பஞ்சாப் மாநிலம் டர்ன்தரான் மாவட்டத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே வயல் வெளியில் டிரோன் ஒன்று கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தபோது அதில் 5 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ் தலைமை இயக்குனர் சவுரவ் யாதவ் கூறும்போது, “5 கிலோ எடையுள்ள ஹெராயின் அடங்கிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஹெக்சாகாப்டர் டிரோனை போலீசார் கைப்பற்றினர்” என்றார்.
கடந்த 28ம் தேதி அமிர்தசரஸ் மற்றும் டர்ன் தரான் மாவட்டங்களில் ஊடுருவிய இரண்டு பாகிஸ்தானின் டிரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.