June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது- வுஹான் ஆய்வக விஞ்ஞானி தகவல்

1 min read

Corona virus is man-made- Wuhan lab scientist informs

5.12.2022
‘கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ்’ என்ற திடுக்கிடும் தகவலை சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் பணியாற்றிய முக்கிய விஞ்ஞானி ஒருவர் வெளியிட்டார்.

விஞ்ஞானி

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் சீனாவில் அமைந்துள்ள வைரஸ் ஆராய்ச்சி நிறுவனமான ‘வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில்’ பணியாற்றிய முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர். அந்த விஞ்ஞானி எழுதிய “வுஹான் பற்றிய உண்மை” என்ற புத்தகத்தின் சில பகுதிகள் வெளிவந்துள்ளன. அதில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் வெளியிட்டார்.

பாதுகாப்பு இன்றி

“வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் கசிந்தது. வைரஸ் ஆராய்ச்சி பற்றிய சோதனைகள் போதிய பாதுகாப்பின்றி அங்குநடத்தப்பட்டன. இத்தகைய வெளிநாட்டு ஆய்வகங்களில் போதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லை. ஒரு வகையில், இதற்கு அமெரிக்க அரசு தான் காரணம். இத்தகைய ஆபத்தான ‘உயிரி தொழில்நுட்பத்தை’ சீனர்களுக்கு மாற்றியதற்கு அமெரிக்க அரசாங்கமே காரணம். உயிரி ஆயுதம் குறித்த தொழில்நுட்பம்(பயோ வெப்பன்) சீனர்களுக்கு நாம் வழங்கியுள்ளோம்.
கொரோனா வைரஸ் ‘மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்டது’ என்பது சீனாவுக்கு முதல் நாளிலிருந்தே தெரிந்த விஷயமே” என விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் தெரிவித்தார்.
நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ‘எக்கோஹெல்த் அலையன்ஸின்’ முன்னாள் துணைத் தலைவர் ஆக விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் இருந்தார். இது தொற்று நோய்களைப் பற்றி ஆய்வு செய்கிறது. எக்கோஹெல்த் அலையன்ஸ் -வுஹான் ஆய்வகத்துடன் நெருங்கிய உறவுகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்க அரசின் ‘தேசிய சுகாதார நிறுவன’ நிதியுதவியுடன் இந்த அமைப்பு வௌவால்களில் உள்ள பல கொரோனா வைரஸ்களை ஆய்வு செய்து வருகிறது.
மறுபுறம், சீன அரசு அதிகாரிகளும் வுஹான் ஆய்வக ஊழியர்களும் கொரோனா வைரஸ் அங்கு தோன்றியதை மறுக்கின்றனர். சமீபத்திய விசாரணையின் படி, வுஹான் ஆராய்ச்சி நிறுவனம் ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.