பாரத் ஜோடோ யாத்திரையின்போது சிறுவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார்
1 min read
Rahul Gandhi interacts with children during Bharat Jodo Yatra
5.12.2022
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. அப்போது அவர் சிறுவர்களுடன் கலந்துரையாடினார்.
ராகுல்காந்தி யாத்திரை
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. 89-வது நாளாக ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்று வருகிறது. இன்று ஜலவார் மாவட்டத்தில் அம்மாநில முதல் மந்திரி அசோக் கெலாட்டுடன் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டர். அவருடன் சச்சின் பைலட்டும் உடன் சென்றார். காலை 6.10 மணிக்கே இந்த யாத்திரை தொடங்கியது. 13 டிகிரி செல்சியஸ் மட்டுமே வெப்ப நிலை இருந்தது.
தனது யாத்திரையின் போது, அங்கு இருந்த குழந்தைகளுடன் ராகுல் காந்தி பேசினார். அதேபோல் தனது யாத்திரையின் போது அங்கிருந்த தாபா ஒன்றில் தேநீரையும் ராகுல் காந்தி அருந்தினார்.