July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

மதம்-பெயரை மாற்றி சிறுமியை திருமணம் செய்ய முயற்சி

1 min read

Attempt to marry a girl by changing her religion-name

9.12.2022
தனது மதம் மற்றும் பெயரை மாற்றி சிறுமியை திருமணம் செய்து கொள்ள வந்த மனிதர் போலீசை கண்டதும் மணமேடையில் இருந்து தலைமறைவானார்.

கடன்

ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவில் ஹர்லா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வங்கியில் கடன் வாங்க சென்றார். அங்கு அந்த பெண்ணை சந்தித்த 50 வயது நபர் ஒருவர் தனது பெயரை சஞ்சய் பெஸ்ரா என்று கூறி அந்த கடனை தான் தருவதாகபழக்கமாகி உள்ளார். அவர் கடனும் கொடுத்து உள்ளார். அதன் பிறகு அந்த நபர் தொடர்ந்து அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வரத் தொடங்கினார்.
அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவர் போலீஸ் சீருடையில் ஆல்டோ காரில் வந்தார். தன்னை போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டார். இதனால் பயந்து போன அந்த ஏழை பெண்மணி அவருக்கு மரியாதை கொடுத்து உபசரித்தனர்.

மகள் திருமணம்

நாளடைவில் வறுமையின் காரணமாக, இந்த நடுத்தர வயது நபருக்கு தங்கள் மகளைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.ஆனால் பெண்ணுக்கு மிகவும் சிறியவயது ஆகும். திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடந்தது. மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக மாப்பிள்ளை கோலத்தில் பண மாலையுடன் பேண்ட் வாத்தியம் முழுங்க அந்த நபர் அங்கு சென்றார். திருமண ஊர்வலத்துடன் சிறுமியின் வீட்டை அடைந்தார், அங்கு திருமண சடங்குகளும் நடந்தது.

தடுத்து நிறுத்தம்

இதற்கிடையில் ஒரு மைனர் பெண்ணுக்கு திருமணம் நடப்பதாக யாரோ போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். இதை தொடர்ந்து திருமணத்தை தடுத்து நிறுத்த போலீசார் அந்த இடத்திற்கு வந்தனர்.அங்கு போலீசாரை பார்த்ததும் நடுத்தர வயது மணமகன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவிட்டார்.
அந்த மனிதர் தனது மதம் மற்றும் பெயரை மறைத்து சிறுமியை திருமணம் செய்து கொள்ள வந்து உள்ளார். ஒரு வழக்கில் அவர் ஏற்கனவே சிறை சென்று உள்ளார். ஏழை இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை அவர் இதேபோன்ற மோசடிகளை செய்து சிக்க வைப்பது வழக்கம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

நடுத்தர வயது மனிதரின் ஆல்டோ காரை போலீசார் மீட்டுள்ளனர், அதில் போலி போலீஸ் சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி மைனர் என்பதால், அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.