குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் ராஜினாமா; 12ந் தேதி மீண்டும் பதவியேற்பு
1 min read
Gujarat Chief Minister Bhupendra Patel resigns; Re-inauguration on 12th
9.12.2022
குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
குஜராத்
குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் வழங்கினார். குஜராத் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதற்காக பாஜகவின் பூபேந்திர படேல் காந்திநகரில் உள்ள ராஜ்பவனுக்கு வந்து ஆளுநரிடம் தந்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
ராஜினாமா செய்துள்ள பூபேந்திர படேல் வரும் 12-ஆம் தேதி குஜராத் முதல்-மந்திரியாக இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். குஜராத் சட்டசபை தேர்தலின் வாக்கு பதிவு நேற்று நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 182 இடங்களில் 156 இடங்களை பாஜக கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. மேலும், குஜராத் தேர்தலில் பாஜக 156 இடங்களில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த நிலையில், காங்கிரஸ் வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி 5 இடங்களும், சமாஜ்வாதி கட்சி 1, சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.