விரைவில் 150 கோடி டுவிட்டர் கணக்குகள் நீக்கம்- எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு
1 min read
Soon 150 crore Twitter accounts will be deleted – Elon Musk action announcement
9.12.2022
விரைவில் 150 கோடி டுவிட்டர் கணக்குகள் நீக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்
எலான் மஸ்க்
சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் விரைவில் 150 கோடி டுவிட்டர் கணக்குகள் நீக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்,அதாவது பல வருடங்களாக டுவீட் அல்லது டுவிட்டரில் உள்நுழைவு இல்லாத சுமார் 150 கோடி கணக்குகள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார் .