July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

திருப்பதியில் ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை மறுநாள் வெளியீடு

1 min read

Arjitha service tickets for the month of January in Tirupati will be released the day after tomorrow

10.12.2022
ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளைமறுநாள் (12-ந்தேதி) வெளியிடப்படுகிறது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆர்ஜித சேவை

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளாக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை 12-ந்தேதி(நாளை மறுநாள்) காலை 10 வெளியிடப்படுகிறது. பக்தர்கள் அன்று மாலை 3 மணிக்கு முன்பதிவு செய்யலாம். முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். ஜனவரி மாதத்துக்கான எலக்ட்ரானிக் டிப் பதிவுகள் (குலுக்கல் முறை) மூலம் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 12-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. பக்தர்கள் 14-ந்தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.