தொடர் மழையிலும் 7-வது நாளாக சுடர் விட்டு எரியும் திருவண்ணாமலை மகா தீபம்
1 min read
The Thiruvannamalai Maha Deepam burns for the 7th day despite continuous rain
12.12.2022
தொடர் மழையிலும் திருவண்ணாமலை மகா தீபம் 7-வது நாளாக சுடர் விட்டு எரிகின்றன. திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கி நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் கடந்த 6-ந் தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் 11 நாட்கள் மலையின் உச்சியில் காட்சி அளிக்கும். அதன்படி இன்று 6-வது நாளாக மலையில் உச்சியில் மகா தீபம் காட்சி அளித்தது. இந்த நிலையில், இன்று திருவண்ணாமலையில் மழை பெய்து வருகிறது. இந்த காற்றிலும் 2668 அடி உயரம் கொண்ட மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 7-வது நாளாக சுடர் விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது. இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.