உரிய நேரத்தில் பணிக்கு வராத 4 அரசு டாக்டர்கள் சஸ்பெண்ட்டு
1 min read
4 government doctors suspended for not coming to work on time
15.12.2022
உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த 4 அரசு மருத்துவர்களை சஸ்பெண்டு செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
டாக்டர்கள்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைமுறைகளை கேட்டறிந்தார். மேலும், சித்தா பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கம், பிரசவத்திற்கு பிந்தைய வார்டு, ஆய்வகம் போன்ற அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு செய்தார்.
மேலும், இந்த ஆய்வின்போது உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த 4 மருத்துவர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். மேலும், இதைக் கண்காணிக்காத செங்கல்பட்டு, நலப்பணிகள் இணை இயக்குநரை வேறு மாவட்டத்திற்கு பணியிடமாறுதல் செய்யுமாறு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு உத்தரவிட்டார்.