பாஜக பிரமுகர் கொலையில் கைதானவர்களுக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
Arrest due to false investigation: Madurai High Court orders compensation of Rs 18 lakh to petitioners
16.12.2022
பரமக்குடி பாஜக பிரமுகர் கொலை வழக்கில் கைதாகி விடுதலையானவர்களுக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பாஜக பிரமுகர் கொலை
பரமக்குடியில் கடந்த 2013-ம் ஆண்டும் பா.ஜ.க பிரமுகர் முருகேசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தவறாக கைது செய்யப்பட்டு விடுக்கப்பட்ட ராஜா முகமதுவுக்கு ரூ.10 லட்சமும், மனோகரனுக்கு ரூ.8 லட்சமும் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காவல்துறை ஆய்வாளரின் தவறான விசாரணையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டதால் இருவரின் குடும்பம் பாதிக்கப்பட்டதாக கூறி இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இழப்பீட்டு தொகையை காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் என்பவரிடம் இருந்த வசூல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பரமக்குடியை சேர்ந்த ராஜா முகமது, மனோகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் மதுரை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்தள்ளது.