ஆண்டாளைப்போல் விஷ்ணுவை மணந்த பெண்
1 min read
A woman married to Vishnu like a man
20.12.2022-
ஆண்டாளைப்போலி் ராஜஸ்தானில் ஒரு பெண் கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டாள்.
ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் ஆண்டாள். இவள் சிறு வயது முதலே கடவுள் கண்ணன் மீது பக்தி கொண்டாள். பருவத்துக்கு வந்த பின்னர் தான் பெருமாளை(மகாவிஷ்ணு) திருமணம் செய்வேன் என்று கூறினார். அவரது பக்தியை மெய்ச்சிய ஸ்ரீரங்கம் பெருமாள் ஆண்டாளை திருமணம் செய்தார்.
அதேபோல் ராஜஸ்தானை சேர்ந்த இந்த 30 வயது பெண்ஒருவர் கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்துக்கு விநாயகர் பூஜை, அக்கினி பூஜை எல்லாம் நடந்தது.
இந்த வினோத திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கோவிந்த்கர் அருகே உள்ள கிராமத்தில் டிசம்பர் 8ஆம் தேதி நடந்தது. பூஜாவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் பூஜா அழகான மஞ்சள் நிற ஆடை அணிந்திருப்பதை காணலாம்.
ஏன் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது என்பதற்கு பூஜா கூறும்போது, “திருமணம் செய்து கொள்வதில் எனக்கு ஆர்வம் இல்லை.அதற்கு பெற்றோர்களே காரணம். திருமணத்தால் தேவையற்ற மோதல்கள் போன்றவை ஏற்படும்” என்றும் பூஜா கூறுகிறார்.
ஆனால், அவளைச் சுற்றியிருந்த யாரும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்ற அவரது முடிவை ஏற்கவில்லை. இறுதியாக அவர் கடவுள் விஷ்ணுவை மணந்தார். கோவிலில் விஷ்ணுவுக்கு உணவு படைக்கப்பட்டது. இருப்பினும், அவரது முடிவு பரவலாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், விஷ்ணுவை திருமணம் செய்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும், யார் என்ன சொன்னாலும் கவலைப்படுவதில்லை என்றும் பூஜா தெரிவித்துள்ளார்.