“கபடி போன்ற இந்திய விளையாட்டுகளை ஊக்கப்படுத்துங்கள்”- பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min read
“Encourage Indian sports like Kabaddi”-BJP PM Modi instructions to MPs
20.12.2022
கபடி உள்ளிட்ட இந்திய விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
விளையாட்டுப்போட்டி
டெல்லியில் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, பா.ஜ.க. எம்.பி.க்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்களில் தினைப் பொருட்கள் குறித்து பிரச்சாரம் செய்யலாம் என்றும் தானியங்களின் நுகர்வு அதிகரிப்பது விவசாயிகளுக்கு நிதி உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
அதே போல் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதை பா.ஜ.க. எம்.பி.க்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, கபடி உள்ளிட்ட இந்திய விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.