திருப்பதியில் ஒரே நாளில் ரூ.5.30 கோடி உண்டியல் காணிக்கை
1 min read
5.30 Crore Bills in Tirupati in a single day
திருப்பதியில் ஒரே நாளில் ரூ.5.30 கோடி உண்டியல் காணிக்கை
தேவஸ்தானம் தகவல்
திருப்பதி,டிச.22-
21.12.2022
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.5.30 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவில்
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக 5 கோடியே 30 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.