காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி ஒட்டிய கட்சி பிரமுகர் மீது குண்டாஸ்
1 min read
Goondas on party leader in saffron with Ambedkar poster
21.12.2022
காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
அம்பேத்கருக்கு மஞ்சள் ஆசை
சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் கடந்த 6-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குருமூர்த்தி, அம்பேத்கர் உருவ படத்தில் காவி உடை அணிவித்து விபூதி பூசி, குங்குமம் வைத்து சுவரொட்டிகள் ஒட்டியிருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கும்பகோணம் மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தியை கைது செய்தனர். இந்த நிலையில் அம்பேத்கரை அவமதித்த வரொட்டி ஒட்டிய வழக்கில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் குருமூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கும்பகோணம் கிளைச்சிறையில் இருந்த அவர் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.