June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

ராகுல்காந்தியின் யாத்திரையில் சோனியா காந்தியும் பங்கேற்பு

1 min read

On Rahul Gandhi’s Yatra; Sonia Gandhi also participated

24.12.2033
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நேற்று காலை தலைநகர் டெல்லிக்குள் வந்தது. டெல்லியில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தி நடைபயணம் மேற்கொண்டார்.

ராகுல்காந்தி

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். ராகுலின் இந்த பாத யாத்திரை 100 நாட்களை கடந்துள்ளது. தலைநகர் டெல்லிக்கு பாரத் ஜோடோ யாத்திரை இன்று நுழைந்துள்ளது. டெல்லிக்கு வந்த ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான சோனியா காந்தியும் பங்கேற்றார். மாஸ்க் அணிந்தபடி சிறிது தூரம் தனது மகன் ராகுல் காந்தியுடன் நடைபயணமாக சோனியா காந்தி சென்றார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இந்த பாத யாத்திரையில் பங்கேற்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.