பெண காவலர் மீது தவறாக நடந்த சம்பவம்- அண்ணாமலை குற்றச்சாட்டு
1 min read
Misbehavior with female police officer- Annamalai allegation
4.1.2023
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பேசுபொருள் ஆகியுள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-
சென்னை விருகம்பாக்கத்தில் கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் பெண் காவலரிடம் திமுகவினர் தவறாக நடந்துள்ளனர். இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், பாஜக போன்ற கட்சிகள் இதுகுறித்து பேசியதை தொடர்ந்து தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வளவு தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு காவல்துறை மீது திமுக அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்தார்களா என்பது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம் அளிக்க வேண்டும்
காயத்திரி ரகுராம்
பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகியதால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. என்னுடைய பாலிசி கட்சியில் இருந்து யார் விலகினாலும் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதான் என்னுடைய வாடிக்கை. எங்கு சென்றாலும் அவர்கள் நல்லா இருக்கட்டும். வாழ்க்கையில் நினைத்தது எல்லா கிடைக்கனும். கட்சியில் இருந்து வெளியே செல்வோர் என்னையோ, கட்சியை புகழ்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது.
மகளிர் அதிகளவில் பாஜகவை நோக்கி வருகிறார்கள். யாரோ ஒருவருக்கு பிடிக்கவில்லை என கட்சியை விட்டு போகிறார்கள் என்றால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது.
மவுனம்
என் மீது அனைவரும் தான் விமர்சனம் வைக்கிறார்கள். அதற்கான பதில் என்னுடைய மௌனம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.