வந்தவாசியில் வாட்ஸ் அப் மூலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்
1 min read
A teacher who sexually harassed students through WhatsApp in Vandavasi
7.1.2023
வந்தவாசியில் வாட்ஸ் அப் மூலம் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த குற்றச்சாட்டின்பேரில் விசாரணை நடந்தது-
ஆசிரியர்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேவுள்ள சாலவேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பரணி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அறிவியல் பாடங்கள் சம்பந்தமாக மாணவிகளுக்கு பாடங்கள் குறித்த விளக்கம் அளிக்கவும் செய்முறை தேர்வு குறித்து பயிற்சி அளிக்கவும் தனியாக வாட்ஸ்அப் குழு அமைத்துள்ளார். இந்த குழுவில் 10-ம் வகுப்பு மாணவ மாணவிகள் உள்ளனர். இந்த வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள மாணவிகள் சில பேருக்கு ஆசிரியர் பரணி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இரவு நேரங்களில் வீடியோ காலில் வரும்படி அச்சுறுத்தியுள்ளார். அப்பில் ஆபாசமாக மாணவிகளிடம் வாட்ஸ் பேசியதாக கூறப்படுகிறது.
புகார்
இதுகுறித்து மாணவிகள் அவரது பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நேற்று பள்ளிக்கு சென்று ஆசிரியர் பரணியை தாக்கினர். மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு பள்ளி முன்பு மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் இருந்த கீழ்க்கொடுங்காலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் ஆசிரியர் பரணியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தில் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அவர்கள் பட்டதாரி ஆசிரியர் பரணியிடம் புகார் மாணவிகள் சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருவண்ணாமலை மாவட்ட கல்வி அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர்.