June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கட்டண விவரம் அறிவிப்பு

1 min read

Class 12 General Examination Fee Details Notification

7.1.2023
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தேர்வு கட்டணம்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்படடு இருப்பதாவது:-

பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அடங்கிய பாடத்திற்கு 225 ரூபாயும், செய்முறை அல்லாத பாடங்களுக்கு 175 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

11ம் வகுப்பு

11 ம் வகுப்பு அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு பாடத்திற்கு 50 ரூபாய் எனவும் இதர கட்டணம் 35 ரூபாயும் செலுத்த வேண்டும். சுயநிதி பள்ளிகள்,மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் வழியில் பயிலாத மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை பெற வேண்டும். 06.01.2023 மதியம் முதல் 20.01.2023 மாலை 5 மணிக்குள் மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணத்தை பெற்று https://www.dge1.tn.gov.in தேர்வுகள் துறை இணையதளத்தில் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.