ரவணசமுத்திரம் ஊராட்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு
1 min read
District Project Director Survey in Ravanasamudram Panchayat
7.1.2023
கடையம் ஊராட்சி ஒன்றியம் இராவண சமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரவணசமுத்திரம் ஊராட்சியில் 2018_19 சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடம், புதிய சுகாதார பொது கழிப்பிடம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம், நமது கிராம பூங்கா ஆகியவற்றை தென்காசி மாவட்ட திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பார்வையிட்டார்
இந்த நிகழ்ச்சியில் இரவணசமுத்திரம் . ஊராட்சி மன்ற தலைவர் முகமதுஉசேன், துணைத் தலைவர் ராமலட்சுமி சங்கிலி பூதத்தார், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோமதி பரமசிவம்,, கனகா பிச்சையா, முகம்மது யக்யா, மொன்னா முகம்மது இர்ஷாத்,கணையம் ஊராட்சி ஒன்றிய ஒன்றிய ஆணையாளர் ராஜசேகர், , வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன், பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், உமாதேவி சேவாலயா சங்கிலி பூதத்தார் , சமுதாய தலைவர் பரமசிவன், வாசகர் வட்ட தலைவர் ஆறுமுகம் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திட்ட இயக்குனரிடம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன் நமது கிராம பூங்காவின் சுற்றுப்புறத்திற்கு காம்பவுண்ட் சுவர் மற்றும் நடைபாதை தளம் அமைக்க கோரிக்கை வைத்தார், அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக திட்ட இயக்குனர் உறுதி அளித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற செயலாளர் மாரியப்பன் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். நூலகர் நடராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.