கிரிவலப்பாதையில் கஞ்சா போதையில் கடைகளை அடித்து நொறுக்கிய சாமியார்
1 min read
The ganja-intoxicated preacher vandalized shops on Kriwalabathi
8.1.2023
திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் போதையில் கடைகளை அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. கிரிவலம் செல்லும் பக்தர்களின் முன்னிலையில் விற்கப்படுவதாகவும் கூறப்படும் நிலையில் இன்று சாமியார் ஒருவர் கஞ்சா போதை தலைக்கேறி அங்கிருந்து நடைபாதை கடைகளை அடித்து நொறுக்கினார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அவரை பிடித்து கை, கால்களை கட்டிபோட்டனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவர் பொதுமக்களையும் கிரிவலம் செல்லும் பக்தர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டினார்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனைகளை கட்டி வருவதாகவும் மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா போதை தலைக்கேறிய லாரி டிரைவர் ஒருவர் ஆடைகளை கலைந்து கிரிவலம் செல்லும் பக்தர்கள் முன் ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது சாமியார் ஒருவர் போதையில் கடைகளை அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.