13-ந் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும்
1 min read
Tamil Nadu Legislative Assembly meeting will be held till 13th
9.1.2023
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை வரும் 13-ம் தேதி வரை நடத்துவது என்று அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சட்டசபை கூட்டம்
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.9) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார். காலை 10.50 மணி வரை ஆளுநர் தனது உரையை வாசித்தார்.
உரை வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றி முடித்ததும், பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை வரும் 13-ம் தேதி வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இரங்கல்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா சமீபத்தில் மறைந்த காரணத்தால் அவருக்கு இன்று (ஜன.10) இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படும். இதனைத் தொடர்ந்து ஜனவரி 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும்.