பொங்கல் விழா கொண்டாட மு.க.ஸ்டாலினுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு
1 min read
Governor RN Ravi invited M.K.Stalin to celebrate Pongal festival
10.1.023
வருகிற 12-ம் தேதி பொங்கல் விழா கொண்டாட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
பொங்கல்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், சென்னை கவர்னர் மாளிகையில் 2023-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கும் பொங்கல் பெருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்களுக்கு அனுப்பிய அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து தமிழக கவர்னர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சித்திரை விழாவுக்கு வழங்கிய அழைப்பிதழில் தமிழ்நாடு கவர்னர் என்றிருந்த நிலையில், தற்போது தமிழக கவர்னர் என்று உள்ளது.