பஞ்சாபில் உள்ள புனித பொற்கோவிலில் ராகுல் காந்தி தரிசனம்
1 min read
Rahul Gandhi’s darshan at the holy Golden Temple in Punjab
10.1.2023
பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் இன்று தரிசனம் செய்தார்.
ராகுல்காந்தி
பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் இன்று தரிசனம் செய்தார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று 116-வது நாளை எட்டியுள்ளது. அரியானாவில் நடந்து வந்த யாத்திரை தற்போது பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திற்குள் நடைப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தரிசனம் செய்தனர். பொற்கோயிலுக்குச் சென்ற ராகுல் காந்தி, காவி நிற தலைப்பாகை அணிந்துச் சென்று பூஜைகளிலும் கலந்துகொண்டார்.