July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

மத்திய அரசின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோர், அவர்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்”- கவர்னர் பேச்சு

1 min read

Those elected by the central government should listen to what they have to say” – Governor’s speech

10.1.2023
“மத்திய அரசின் மூலம் மத்திய அரசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்க வேண்டும்” என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சி

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை தர்பார் ஹாலில் இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்வை எதிர்கொள்வோருடன் கவர்னர் நடத்தும் உத்வேகமூட்டும் ‘எண்ணித் துணிக’ கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து 80 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு தேர்வர் குறித்தும் தனித்தனியாக பெயர், படிப்பு மற்றும் ஊர் என்ன என்பதை கவர்னர் கேட்டறிந்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, உங்கள் நேர்முகத்தேர்வு தேதி பற்றி தெரியுமா என்று கேட்டதற்கு, இந்த மாதம் 30ம் தேதி நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது என தேர்வர்கள் தெரிவித்தனர்.
இந்த நேர்முகத்தேர்வு உங்களை பற்றியது. நீங்கள் எந்த விதத்தில் கேள்வியை அணுகி பதில் அளிக்கிறீர்கள் என்பது பற்றியது என்று கூறினார். முதலில் கேள்வியை கவனியுங்கள். பின்னர் யோசித்து பதில் அளியுங்கள் என்றார்.
4 வது முறை நேர்முகத் தேர்வை சந்திக்க இருக்கும் ஒரு தேர்வர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஆளுநர், ஒரு ஐஏஎஸ் தேர்வரிடம் எதிர்பார்ப்பது என்ன என்ற கேள்விக்கு, யுபிஎஸ்சி ஒரு சிவில் சர்வீஸ் அதிகாரியை தான் எதிர்பார்க்கிறது. சமூக சீர்திருத்தவாதியை அல்ல. ஒரு பிரச்சினையை, கேள்வியை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பபே முக்கியம் என்றார்.
ஆந்திராவில் இருந்து வந்த தேர்வர் ஒருவர் “மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் , சுப்ரீம் கோர்ட்டிற்கும் உள்ள கருத்து வேறுபாடு, கொள்கை வேறுபாடு இருக்கும் நான் எதை பின்பற்றுவது” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த கவர்னர் ஆர்.என்.ரவி, “இந்திய குடிமைப்பணிகள் அதிகாரிகள் மத்திய அரசின் மூலம் மத்திய அரசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்க வேண்டும்” என்றார்.
“பண மதிப்பிழப்பு நல்லதா இல்லையா” என்ற கேள்விக்கு, “எந்த ஒரு மாற்றம் என்றாலும் அதில் பிரச்சனைகள் இருக்க தான் செய்யும். ஆம் பணமற்ற பரிமாற்றத்தில் முழுமையை அடையவில்லை. இன்னும் பண பரிவர்த்தனை உள்ளது. ஆனால் தெருவோர கடைகள் வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை சென்றடைந்துள்ளது” என்று கூறினார்.
“பதற்றத்தை எப்படி எதிர்கொள்வது” என்ற கேள்விக்கு, “ஆழ்ந்த மூச்சு விடுதல், தண்ணீர் சரியாக குடிக்க வேண்டும், சரியான நேரத்தில் தூங்க வேண்டும். (நாவல் ஒன்றில் இருக்கும் வரிகளை நினைவு கூறினார்.) 21 வயதில் நீங்கள் நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகி உள்ளீர்கள் அந்த நம்பிக்கையை உடன் எடுத்து கொள்ளுங்கள். சிவில் சர்வீஸ் தான் உலகின் முடிவு என்பதல்ல இதில் வெற்றி இல்லை என்றாலும் எதுவும் மாற போவதில்லை. உங்களை கேள்வி கேட்பவர்கள் மனிதர்கள் தான்” என்று அந்த தேர்வருக்கு ஊக்கம் அளித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.