July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

1 min read

Sonia Gandhi returns home from hospital

11.1.2023
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடந்த 4 ஆம் தேதி உடல் நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வீடு திரும்பினார்.

சோனியா காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடந்த 4 ஆம் தேதி சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்னர்.
பின்னர் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் , படிப்படியாக அவர் குணமடைந்து வருகிறார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சோனியா காந்தி நேற்று (ஜனவரி -10) மாலை 3 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் தகவல் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.