July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னை ஐகோர்ட்டு தடையை மீறி
முதல் நாளிலேயே வாரிசு, துணிவு படங்கள் இணையதளத்தில் வெளியானது

1 min read

Varisu and Thadvu films were released on the website on the first day in violation of the Chennai High Court ban

11.1.2023
சென்னை ஐகோர்ட்டு தடையையும் மீறி துணிவு, மற்றும் வாரிசு திரைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

அஜித், விஜய் படங்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று நள்ளிரவு 1 மணி அளவில் உலகம் முழுவதும் வெளியானது. அதேபோல் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணி அளவில் உலகம் முழுவதும் வெளியானது.
இரு நடிகர்களின் படங்களின் வெளியீட்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவர்களது ரசிகர்கள் சிறப்பு காட்சியை சிறப்பாக கொண்டாடினர்.
சென்னை ரோகிணி திரையரங்கில் தொடங்கி நேற்று இரவு முதலே அஜித் ரசிகர்கள் திரண்டு பாடல் இசைத்து அமர்க்களம் செய்தனர். மதுரை, கோயம்புத்தூர், வேலூர் என தமிழகம் முழுவதும் அஜித் ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு திரண்டு சிறப்புக் காட்சியை வரவேற்றனர்.

இணையதனத்தில்

இந்தநிலையில், பொங்கலை முன்னிட்டு அதிக எதிர்பார்ப்பில் தியேட்டரில் இன்று வெளியான துணிவு, மற்றும் வாரிசு திரைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை ஐகோர்ட்டு தடையை மீறி முதல் நாளிலேயே இணையதளங்களில் படம் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.