கவர்னர் ஆர்.என்.ரவி பொங்கல் வாழ்த்து
1 min read
Governor RN Ravi Pongal greetings
14.1.2023
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால கலாசாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். நமது வீரத்தை ‘ஜல்லிக்கட்டு’ விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம். இந்த அறுவடை திருநாளில் எங்கிருந்தாலும், எல்லா கிராமங்களிலும், சூரிய கடவுள் மற்றும் நம் விருப்ப தெய்வங்களை கைகூப்பி வணங்கி பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு மரியாதை செலுத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகையில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.