அமைச்சர் துரைமுருகன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி
1 min read
Minister Duraimurugan admitted to hospital again
14.1.2023
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துரைமுருகன்
திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவ குழுவினர் அமைச்சர் துரைமுருகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கடந்த 10-ம்தேதி நள்ளிரவில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் இல்லம் திரும்பி இருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவ குழுவினர் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.