இந்தியாவின் கடற்படை கப்பல் இலங்கை திரிகோணமலை சென்றது
1 min read
Indian Navy Ship Visits Sri Lanka Trikonamalai
15.1.2023
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் இலங்கை சென்றுள்ளது.
கடற்படை கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் டெல்லி கப்பல் இலங்கையின் வடகிழக்கு பகுதியில் உள்ள திரிகோணமலை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. இரண்டு நாட்கள் அலுவல் பயணமாக வந்த இந்திய கடற்படை கப்பலுக்கு இலங்கை அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். 390 கப்பல் சிப்பந்திகளுடன் இலங்கை துறைமுகத்தில் இந்தக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
வரும் 19 ஆம் தேதி மற்றும் 20 ஆம் தேதிகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் இலங்கை சென்றுள்ளது.
இந்தியா – இலங்கை இடையேயான நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பை ஊக்கப்படுத்தும் வகையில் இருநாட்டு கடற்படை வீரர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான கடற்படை சவால்களை சமாளிக்கும் வகையில் இதுபோன்ற கடற்படை பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.