உக்ரைனில் ரஷியா ஏவுகணை தாக்குதல்- 21 பேர் சாவு
1 min read
Russia missile attack in Ukraine – 21 dead
15.1.2023
உக்ரைனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா ஏவுகளை தாக்குதல் நடத்தியது. இதில் 21 பேர் பலியார்கள்.
ஏவுகணை தாக்குதல்
உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றன. நேற்று இரவு டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பல வாகனங்கள் தீப்பற்ற எரிந்தன.
குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அங்கு மீட்பு பணி நடைபெறுகிறது. இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் 15 வயது சிறுமி உள்பட 21 பேர் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. இந்த தாக்குதல் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகள் அழிந்துவிட்டதாகவும், நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிப்பதாகவும் அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி கைரிலோ திமோஷென்கோ கூறி உள்ளார்.