கேரளாவில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம்
1 min read
Wearing a face mask in public places is mandatory in Kerala
17.1.2023
கேரளத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.
கேரள அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-
முகக்கவசம்
கொரோனா தீநுண்மி தொடா்ந்து அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே கேரளத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள், அரசுப் பேருந்துகளில் செல்லும்போதும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். அனைவரும் தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இந்த உத்தரவு ஜன.12 முதல் ஒரு மாதத்துக்கு அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.