நிலவில் கால் வைத்த 2வது நபருக்கு 4வது திருமணம்
1 min read
4th marriage to 2nd person to set foot on the moon
21.1.2023
நிலவில் கால் வைத்த 2வது நபர் தனது 93 வயதில் 4வது திருமணம் செய்துள்ளார்.
நிலவுக்கு…
கடந்த 1969ம் ஆண்டு அப்பல்லோ 11 மிஷனில் சந்திரனில் மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்கள் இறங்கினர். அப்பல்லோ 11 மிஷனில் சந்திரனில் நுழைந்த மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களில் பஸ் ஆல்ட்ரின் ஒருவர். அந்த மிஷனில் இருந்த மூன்று அமெரிக்க வீரர்களில் தற்போது உயிருடன் இருப்பவர் இவர் மட்டுமே.
அப்போலோ-11 பயணத்தின் போது சந்திரனில் நிலாவில் முதலாவதாக கால் வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். இரண்டாவது கால் பதித்தவர் பஸ் ஆல்ட்ரின்.
4வது திருமணம்
ஆல்ட்ரின் திருமணமாகி மூன்று முறை விவாகரத்து பெற்றார். இவருக்கு தற்போது 93 வயதாகிறது. இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலியான அண்கா பாரை ( வயது 63) நான்காவதாக திருமணம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், எனது 93வது பிறந்தநாளில் எனது நீண்ட கால காதலியான டாக்டர் அன்கா வி பாரும் நானும் திருமணம் செய்து கொண்டதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒரு சிறிய விழாவில் திருமணம் செய்து கொண்டோம். மேலும் ஓடிப்போன இளைஞர்களைப் போல உற்சாகமாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.