பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் வென்றார்
1 min read
Aseem won the Bigg Boss season 6 title winner title
23.1.2023
பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடம் விக்ரமனுக்கு வழங்கப்பட்டது.
பிக்பாஸ்
பிக்பாஸ் சீசன் 6 போட்டி மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இந்த சீசனில் 3 போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தேர்வாகினர். பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் யாருக்கு என்ற போட்டியில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோருக்கு இடையே போட்டி தீவிரமானது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி 6-வது சீசனின் வெற்றியாளர் அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.
இதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் பேசப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடம் விக்ரமனுக்கும், மூன்றாவது இடம் ஷிவினுக்கு வழங்கப்பட்டது.