ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் சாலையை ஆகிரமித்து சுவர் கட்டியதால் பரபரப்பு
1 min read
There is a commotion near Aavadi due to encroachment of the road with fake documents and construction of a wall
23.1.2023
ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டையில் போலியான ஆவணம் மூலம் சாலையை பத்திர பதிவு செய்ததோடு இருபுறமும் மதில் சுவர் எழுப்பி இரும்பு கேட் அமைத்ததால் பொதுமக்கள் சென்று வரயுடியாத நிலை: நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
சாலை ஆக்கிரமிப்பு
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோமதி. இவரது வீட்டுக்கு எதிர் திசையில் உள்ள வி.ஏ உன்னி என்பவரது வீட்டுமனையையும் கோமதி கடந்த 2002-ல் வாங்கியுள்ளார்.
இதனால் எதிரெதிர் திசையில் வீடுகளை கட்டியவர் இருபுறமும் கம்பி கேட் மற்றும் மதில் சுவர் ஆகியவற்றை எழுப்பி சாலையை ஆக்கிரமித்து உள்ளதால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அந்த தெரு வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கேட்டதற்கு இந்த இடத்தையும் தான் வாங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கம் பார்த்துள்ளனர்.
போலி ஆவணம்
அப்போது அந்த இடத்தை வெங்கடேஸ்வரா நகருக்கான சர்வே எண்ணை கொண்டு பிளாட்டின் எண் எதுவும் இல்லாமல் போலியான ஆவணம் தயாரித்து வீட்டு மனையாக பதிவாகி இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து சாலையை ஆக்கிரமித்து பொதுமக்கள் சென்று வர தடையாக இருக்கும் கோமதி என்பவரை விசாரித்து போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் பகுதி மக்கள் புகார் மனுவை அளித்துள்ளனர்.
இது குறித்து ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் தெரிவித்து உரிய நடவடி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்ததால் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.