June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம்; டச்சு விஞ்ஞானியின் கணிப்பு

1 min read

Earthquake risk in India; A prediction by a Dutch scientist

8.2.2023
டச்சு ஆய்வாளர் பிராங்க் ஹோகர்பீட்ஸ் இந்தியாவிலும் நிலநடுக்கம் வர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம்

துருக்கி, சிரியா நிலநடுக்கம் ஏற்படும் என 3 நாட்களுக்கு முன்பே கணித்த டச்சு ஆய்வாளர் பிராங்க் ஹோகர்பீட்ஸ் இந்தியாவிலும் நிலநடுக்கம் வர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது பீதியை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 புள்ளிகள் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையும், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது. இவ்விரு நாடுகளும் பேரழிவைச் சந்தித்துள்ளன. அங்கு பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.
நிலநடுக்க மையப்பகுதிக்கு தென்மேற்கில் அமைந்துள்ள ஹட்டாய் மாகாணத்தில் மட்டும் 1,500 கட்டிடங்கள் தரை மட்டமாகி இருக்கின்றன. இடிந்து தரை மட்டமான கட்டிடங்களின் இடிபாடுகளை நவீன எந்திரங்கள்உதவியுடன் தோண்ட தோண்ட பிணங்கள் கண்டெடுக்கப்படுவது, இவ்விரு நாடுகளிலும் தீராத சோகமாக, நெஞ்சை நொறுக்கும் துயரமாக மாறி இருக்கிறது.
இடிபாடுகளில் படுகாயங்களுடன் குற்றுயிராக கிடந்தவர்களும் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். துருக்கி சிரியாவில் தொடர்ந்து அதிகரித்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 11,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச்சரிக்கை

இந்த உலகத்தையே துயரத்துக்குள்ளாக்கியிருக்கும் இந்த துருக்கி, சிரியா நிலநடுக்கம் தொடர்பாக ஒரே ஒருவர் முன்கூட்டியே கணித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இந்த கொடூர சம்பவம் நடப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக, பிராங்க் ஹோகர்பீட்ஸ் என்ற டச்சு விஞ்ஞானி, பிப்ரவரி 3ஆம் தேதி தென்-மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதிகளில் 7.5 ரிக்டர் அளவில் தற்போதோ அல்லது சில நாள்களிலோ நிலநடுக்கம் நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் அவரைப் பற்றிய தகவலில், நெதர்லாந்தில் உள்ள சூரிய முறையின் வடிவியல் ஆய்வு மையத்தில் பணியாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

இந்தநிலையில் துருக்கி, சிரியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தொடங்கும் நிலநடுக்கம், பாகிஸ்தான், இந்தியா வழியாக சென்று இந்திய பெருங்கடலில் முடியும் என டச்சு ஆய்வாளர் பிராங்க் ஹோக்கர்பீட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் மாநில மந்திரி இப்ராகிம், பிராங்க் ஹோகர்பீட்ஸ் பேசிய வீடியோவை தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

நிலநடுங்களின் தீவிரம் 5 நில அதிர்வு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது:
மண்டலம் 1, மண்டலம் 2, மண்டலம் 3, மண்டலம் 4 மற்றும் மண்டலம் 5, கடைசியாக மிகவும் ஆபத்தானது. இருப்பினும், இந்தியாவில், பகுதிகள் 4 நில அதிர்வு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குஜராத், இமாச்சலப் பிரதேசம், பீகார், அசாம், மணிப்பூர், நாகாலாந்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் அந்தமான் & நிக்கோபார் உள்ளிட்ட மாநிலங்கள் மண்டலம் 5 க்குள் வருவதால், அதிக தீவிர நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி அன்று, குஜராத்தில் 7.6 ரிக்டர் அளவிலான அதிதீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. புஜ் பூகம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இது அந்த பகுதிக்கு பேரழிவை ஏற்படுத்தியது பல உயிரிகள் மற்றும் கட்டிடங்கள் பெருத்த சேதம் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.