June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

டெல்லி- மும்பை விரைவுச் சாலையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

1 min read

Prime Minister Modi inaugurated the Delhi-Mumbai Expressway

12.2.2023
டெல்லி- மும்பை விரைவுச்சாலையின் முதல் கட்டம் உட்பட மொத்தம் நான்கு திட்டங்களுக்கு காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

விரைவு சாலை

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் வீடியோ இணைப்பு மூலம் நிகழ்ச்சியில் உரையாற்றினர். டெல்லி- மும்பை விரைவுச் சாலையின் 246 கி.மீ பகுதியை பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் தௌசாவில் இன்று திறந்து வைத்தார். இந்த திட்டம் டெல்லி- தௌசா- லால்சோட் பாதை தேசிய தலைநகருக்கும் ஜெய்ப்பூருக்கும் இடையிலான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது.
டெல்லி- மும்பை எக்ஸ்பிரஸ்வே 1,386 கிமீ நீளத்துடன் இந்தியாவின் மிக நீளமான பாதையா அமைகிறது. டெல்லிக்கும் மும்பைக்கும் இடையிலான பயண தூரம் 12 சதவீதம் குறையும் என்றும், 1,424 கிமீ முதல் 1,242 கிமீ என்றும், பயண நேரம் 50 சதவீதம் குறையும் என்றும், தற்போதைய 24 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான டெல்லி- மும்பை விரைவுச்சாலையின் முதல் கட்டம் உட்பட மொத்தம் நான்கு திட்டங்களுக்கு காணொலி மூலம் தொடங்கி வைத்தார். விழாவில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய இணை அமைச்சர் வி.கே சிங், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் பிற தலைவர்கள் மேடையில் இருந்தனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் வீடியோ இணைப்பு மூலம் நிகழ்ச்சியில் உரையாற்றினர். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:-

நெடுஞ்சாலைத் திட்டங்கள், துறைமுகங்கள், ரயில்வே, ஆப்டிகல் ஃபைபர் போன்றவற்றில் அரசு முதலீடு செய்து, மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கும்போது, வணிகர்கள், சிறு கடைக்காரர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அது பலம் அளிக்கிறது. உள்கட்டமைப்பு மீதான முதலீடு அதிக முதலீட்டை ஈர்க்கிறது. இத்திட்டம், 12,150 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டது. இந்த புதிய பிரிவானது ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி இடையிலான பயண நேரத்தை பாதியாக குறைக்கும். பணி நிமித்தமாக டெல்லிக்கு செல்பவர்கள், தங்கள் பணியை முடித்து மாலையில் விரைவில் வீடு திரும்பலாம். விரைவுச் சாலையைச் சுற்றி கிராமப்புற சந்தைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அங்கு உள்ளூர் கைவினைஞர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம். இந்த விரைவுச் சாலையானது சரிஸ்கா தேசியப் பூங்கா, கியோலாடியோ தேசியப் பூங்கா, ரந்தம்பூர் தேசியப் பூங்கா மற்றும் ஜெய்ப்பூர், அஜ்மீர் போன்ற நகரங்களுக்கும் பயனளிக்கும். ராஜஸ்தான் ஏற்கனவே அதன் சுற்றுலாத் துறைக்கு பெயர் பெற்றது. மேலும் புதிய உள்கட்டமைப்பு திட்டத்துடன் ஈர்ப்பு மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.