ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார்
1 min read
President Dravupati Murmu is coming to Madurai
15.2.2023
ஜனாதிபதி முர்மு வருவதால் மதுரையில் பிப்ரவரி 17, 18-ல் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
ஜனாதிபதி வருகை
ஜனாதிபதி திரவுபதி முர்மு பிப்ரவரி 18-ஆம் தேதி 2 நாள் சுற்றுப்பயணமாக முதல் முறையாக தமிழகம் வருகிறார். பிப்ரவரி 18-ந் தேதி காலை புதுடெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வரும் அவர், பின்னர் கார் மூலம் பகல் 12.15 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்.
கோவை
பின்னர் மீண்டும் விமானம் மூலம் மதுரையில் இருந்து கோவை வருகிறார். அங்கு ஈஷா மையத்தில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி ,மதுரையில் பிப்ரவரி 17, 18-ல் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.