ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்க கோரி திமுக நோட்டீஸ்
1 min read
DMK notice seeking debate on banning online rummy in Parliament tomorrow
12/3/2023
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கக்கோரி திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கக்கோரி திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் ஆன்லைன் ரம்மி தடை குறித்து விவாதிக்க திமுக நாளுமன்ற தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து, நாளை நாடாளுமன்றத்தில் ஆன்லைன் ரம்மி தடை விப்பது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.