8 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் ஒருவர் சாவு
1 min read
One person dies in Tamil Nadu due to corona after 8 months
12.3.2023
தமிழகத்தில இன்று ஒரே நாளில் 40 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 8மாதங்களுக்கு பிறகு கொரோனாவுக்கு ஒருவர் இறந்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்தது. இந்த நிலையில் ஒமிக்ரைன் வகை தொற்று தற்போது அதிகளவில் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனாவுக்கு வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சிந்தாமணி, பூசாரி தெருவை சேர்ந்த உதயகுமார், பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவர் சுற்றுலா செல்வதற்காக கோவா சென்று உள்ளார் கோவா சென்ற அவர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அங்கு சென்று சுற்றுலா முடிந்த பின்பு திருச்சி திரும்பி உள்ளார்.
இந்நிலையில் கோவாவில் இருந்து திருச்சி திரும்பிய உதயகுமாருக்கு கடும் வயிற்றுப்போக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது இதன் காரணமாக திருச்சி பாபு ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்வதற்கு முன்பே அவர் நேற்று காலை இறந்துவிட்டார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 38,050 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலையில் கொரோனாவால் முதியவர் ஒருவர் இறந்தநிலையில் 8 மாதங்களுக்கு பிறகு கொரோனாவால் ஒருவர் மீண்டும் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் திருச்சியில் 27 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.