தென்காசி மாவட்டத்தில்64 மையங்களில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 18,299 மாணவர்கள்
1 min read
64 centers in Tenkasi district18,299 students appeared for the Plus 2 examination
13.3.2023
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. 5.4.2023 முடிய நடைபெறுகிறது. தென்காசி வருவாய் மாவட்டத்தில் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வினை 16,499 மாணவ, மாணவிகளும், மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வினை 18,299 மாணவ, மாணவிகளும் ஆக மொத்தம் 34,798 மாணவ, மாணவிகள்; எழுதுகின்றனர்.
மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கு தென்காசி மாவட்டத்தில் 64 தேர்வு மையங்கள் (தனித்தேர்வர்களுக்கு மட்டும் 2 மையங்கள்) அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று 13.03.2023 தென்காசி திருமதி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வு மையத்தில் நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு பொது மொழித் தேர்வினை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் பார்வையிட்டார். அப்போது அவருடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.கபீர் உடன் இருந்தார். இத்தேர்வு மையத்தில் 441 மாணவ, மாணவிகள் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வினையும், 434 மாணவ, மாணவிகள் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வினையும் எழுதுகின்றனர்.