July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 50,674 மாணவ- மாணவிகள் பிளஸ் 2 தேர்வை எழுதவில்லை

1 min read

In Tamil Nadu, 50,674 students did not write the Plus 2 examination

13/3/2023
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் மொழித்தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு

2022-23-ம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் இம்மாதம் தொடங்குகிறது. பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுத இருக்கின்றனர். சென்னை மாநகரில் மட்டும் 405 பள்ளிகளில் இருந்து 45 ஆயிரத்து 982 மாணவ-மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 225 இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வான தமிழ் மொழித்தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை 50,674 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளை சேர்ந்த 8,51,303 மாணவ,மாணவிகளில் 49,559 பேர் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வை தனித்தேர்வர்கள் 1,115 பேரும் எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று நடைபெற்ற மொழி பாட தேர்வில் வேலூரில் காப்பி அடித்ததாக சிக்கிய 2 மாணவர்கள் சிக்கினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.