தமிழ்நாட்டில் மேலும் 40 பேருக்கு கொரோனா
1 min read
40 more corona in Tamilnadu
14.3.2023
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் புதிதாக 2,690 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6.92 கோடி பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று புதிதாக 40 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 23 பேர். பெண்கள் 17 பேர். கொரோனா தொற்றிலிருந்து 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 35, 57,008 அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று 37 பேருக்கு கண்டறியப்பட்டது. சென்னையில் இன்று ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 9 ஆக இருந்தது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.